உள்ளூர் முக்கிய செய்திகள்

ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

ஹோமாகம, கெந்தலந்த பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் மேலும் பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 4 கைக்குண்டுகள், துப்பாக்கி ஒன்று, டெட்டனேடர் 2, கல்கடஸ் ரக துப்பாக்கி ஒன்று, ரிபீடர் தோட்டாக்கள் 10, கை விலங்கு ஒன்று, எயார் ரைபல் ஒன்று, அதற்கான தோட்டாக்கள் 600 மற்றும் டீவிடீ உபகரணங்கள் மூன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 29 ஆம் திகதி மற்றும் நேற்று (01) ஹோமாகம, பிட்டிபன வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட இருவரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டனார்.

விசாரணைகளின் அடிப்படையில் நேற்று இரவு அத்துருகிரிய பகுதியில் வைத்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஹபரகட பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே ஹோமாகம, கெந்தலந்த பகுதியில் உள்ள வீடொன்றில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisements