உள்ளூர் முக்கிய செய்திகள்

மங்கள, மலிக், சுமந்திரன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்.

ராஜித சேனரத்ன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் வாக்குமூலம் வழங்குவதற்காக அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அழைப்பாணையின் அடிப்படையில் அவர்கள் இன்று ஆஜராகியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இன்றை தினம் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவரால் இன்று ஆஜராக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்ததினால் அவரை செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Advertisements