விளையாட்டு

இங்கிலாந்து vs பாகிஸ்தான் மூன்றாவது T20 : பாகிஸ்தான் வெற்றி

இங்கிலாந்து அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடர், 1 க்கு 1 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

மென்சஸ்டரில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி, 5 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து, 190 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 191 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 20 க்கு 20 போட்டி, சீரற்ற வானிலை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

இதற்கமைய, தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.


Advertisements