பிரிட்டனின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொவிட் 19 தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனையில் 90சதவீதம் வினைத்திறனாவுள்ளமை தெரியவந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா எனும் கொவிட்19 நோய்கான்கான தடுப்பு மருந்தை தயாரித்து பரிசோதித்தது வருகிறது. இத்தடுப்பு மருந்துக்கு கோவிஷீல்ட் ((Covishield) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இடைக்கால தரவுகளின்படி, இத்தடுப்பூசியானது 70 சதவீதம் பாதுகாப்பளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இருதடவைகள் செலுத்தப்பட்ட பின் இது 90 சதவீதம் வரை இது வினைத்திறனாக உள்ளது என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பைஸர் மற்றும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பு மருந்தும் அமெரிக்காவின் மொடேர்னா நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்தும் 95 சதவீதம் பாதுகாப்பு அளிப்பதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மேற்படி 2 மருந்துகள் போன்றல்லாமல், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பு மருந்தானது மலிவானதாகவும், சேமித்து வைப்பதற்கும் உலகின் எந்த மூலைக்கும் கொண்டு செல்வதற்கும் இலகுவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 23,000 பேர் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர். ஆகையால் தடுப்பூசியின் நம்பகட்த்தன்மையை உறுதிப்படுத்த நிறைவான தரவுகள் உள்ளன என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.