உள்ளூர் முக்கிய செய்திகள்

மருதனார்மடம் கொத்தணி்; மேலும் 4 வியாபாரிகளுக்கு தொற்று!

மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பிரிஆர் முடிவு அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தினால் இன்று (டிசெ. 15) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுவிலைச் சேர்ந்த 2 பேரும் தெல்லிப்பழை, சண்டிலிப்பாயைச் சேர்ந்த தலா ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரும் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகள்.

இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.


Advertisements