உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் பிரபல பாடசாலை மாணவனிற்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளங் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் ஒருவர் 19 வயதுடைய பாடசாலை மாணவனாவார். இணுவில் பகுதியை சேர்ந்த இந்த மாணவன் பாடசாலைகள் இயங்கியது வரையில் தினமும் பாடசாலைக்கு சென்று வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. யாழ் பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அடையாளங் காணப்பட்டவர்களில் ஒருவர் இணுவிலை சேர்ந்த 19 வயதான மாணவனாவார். இணுவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் கலைப்பீடத்தில் கல்வி கற்று வந்த இந்த மாணவன், பாடசாலைகளிற்கு விடுமுறை அறிவிக்கும் வரை தினமும் பாடசாலை சென்று வந்துள்ளார்.

இவரது நண்பர் ஒருவர் சுன்னாகம் வர்த்தக நிலையத்தில் இருந்து கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது.

News – Jaffna Today


Advertisements