உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்.சாவகச்சோி – இல்வாரை நீர் வாய்க்காலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு..!

யாழ்.சாவகச்சோி- கனகம்புளியடி வீதியில் இல்வாரை என்ற இடத்தை பார்வையிடுவதற்கு பெருமளவு மக்கள் கூடிவரும் நிலையில் பொதுமக்கள் அங்கு கூடுவதற்கு சுகாதார பிரிவு தடை விதித்திருப்பதுடன், மீறி கூடினால் பாரபட்சமின்றி அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். என சுகாதார பிரிவினர் தொிவித்திருக்கின்றனர்.

இது குறித்து மேலும் தொியவருவதாவது, இல்வாரை என்ற பகுதியில் நீர் வாய்க்காலை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் அதிகளவில் கூடிவருகின்றனர். இதனையடுத்து முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரியிருந்தனர்.

ஆனால் அங்கு கூடும் மக்கள் மிகமோசமான முறையில் சுகாதார நடைமுறைகளை உதாசீனம் செய்து குடாநாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் கூடிவருகின்றனர். இதனையடுத்து அந்த விடயத்தில் கரிசனை செலுத்திய சுகாதார பிரிவு, இல்வாரை பகுதியில் கூடுவதற்கு தடைவிதித்துள்ளதுடன், இதனை மீறி அங்கு கூடினால் பாரபட்சம் இல்லாமல் சகலருக்கம் கட்டாய தனிமைப்படுத்தல் வழங்கப்படும். என எச்சரித்துள்ளது.


Advertisements