ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையினை செயற்படுத்துவது தொடர்பில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை குறிபிடத்தக்கது.