உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் உடுப்பிட்டி வயோதிபருக்கு அடித்த யோகம்!

உடுப்பிட்டியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பின் மூலம் 20 லட்சம் ரூபா கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் பல்லாண்டு காலமாக அதிஸ்டலாபச் சீட்டு வாங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றார்.

அவ்வாறு கடந்த வாரம் வாங்கிய அதிஸ்டலாபச் சீட்டிற்கே 20 இலட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உடுப்பிட்டியில் சந்தைக்கு அருகாமையில் வசிக்கும் 70 வயதுடைய செல்லத்துரை என்பவருக்கே இந்த அதிஸ்டம் அடித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


Advertisements