உள்ளூர் முக்கிய செய்திகள்

சுமந்திரன், சாணக்கியன் உள்பட எம்.பிக்கள் நால்வர் சுயதனிமைப்படுத்தலில்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமாகப் பழகிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தலை கடைப்பிடிக்கின்றனர்.

இந்த தகவலை நாடாளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் நான்கு பேரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகிய இருவரும் அடங்குகின்றனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலதா அதுகொரல, கஜந்த கருணாதிலக ஆகியோரும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அவர்கள் நால்வரிடமும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற சிசிரிவி கமராக்களின் பதிவுகளின் அடிப்படையில் கடந்த 5 ஆம் திகதி நாடாளுமன்றில் ரவூக் ஹக்கீமுடன் நெருக்கமாகப் பழகிய உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாள்களில் தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisements