தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கான அறிவித்தல்

சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகை எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மே மாதத்தில் சினோபாம் முதலாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள், தாம் முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையங்களிலேயே இரண்டாவது தடுப்பூசியையும் ஜூன் மாதத்தில் அதே திகதிகளில் பெற்றுகொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.Read More

பருத்துறை கடற்பரப்பில் பெருமளவு போதைப் பொருள், படகு, மோட்டார் சைக்கிள் மீட்பு,

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 48 கிலோ கஞ்சா கடற்படை மற்றும் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முற்றுகை இன்று அதிகாலை ஒரு மணியளவில் பருத்தித்துறை கடற்பரப்பில் இடம்பெற்றது. கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளும் இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது இந்தியாவிலிருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் கைவிட்டு சென்ற மோட்டார் சைக்கிள் இரண்டும், கஞ்சா […]Read More

எழுதுமட்டுவாள் பகுதியில் விபத்து…

யாழ்.எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏ-9 வீதியால் பயணித்த கன்டர் வாகனம் ஒன்றே வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த 8 பேர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.Read More

தடுப்பூசி வழங்கும் பணிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நோில் பார்வையிட்டார்.

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி வழங்கும் பணிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நோில் பார்வையிட்டார். இதன்போது யாழ்.மாவட்டத்தில் நல்லூர் கைதடி, கோப்பாய், பருத்திதுறை, கரவெட்டி போன்ற பகுதிகளுக்கு கொவிட் – 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நாமல்ராஜபக்‌ஷ பார்வையிட்டு கேட்டறிந்தார். இவருடன் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுனர் பி.எம் சாள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்திருந்தனர்.Read More

வாள்வெட்டு சம்பவத்தில் வயதான பெண் ஒருவர் உட்பட 11 பேர் படுகாயம்

கிளிநொச்சி – உருத்திரபுரம் கூழாவடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வயதான பெண் ஒருவர் உட்பட 11 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வீதியால் சென்ற ரக்ரர் மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட முரண்பாடு இவ்வாறு மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளது. சம்பவத்தில் 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் […]Read More

யாழ்.மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்.மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்திலிருந்து சுமார் 1003 பேருடைய PCR மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்திற்கு அனுப்பபட்டிருந்த நிலையில், 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி யாழ். திருநெல்வேலி பாற்பண்ணை பாரதிபுரம் பகுதியில் 88 பேருக்கும், யாழ்.நவீன சந்தையுடன் தொடர்புடைய 20 பேர் அடங்கலாக 26 பேருக்கு யாழ்.மாநகர வைத்திய அதிகாரி பிரிவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் […]Read More

இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 29 பேருக்கு தொற்று விபரம்

இன்று வட மாகாணத்தில் 637 பேருக்கு COVID-19 பரிசோதனை செய்யப்பட்டது. * இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 29 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. * யாழ் மாவட்டம்-25 * கிளிநொச்சி மாவட்டம் -1 *வவுனியா மாவட்டம் -1 *மன்னார் மாவட்டம் – 2Read More

யாழ் நகரத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ் நகரததிலுள்ள வர்த்தக நிலையங்களில பணியாற்றுபவர்களிற்கு நேற்று முன்தினம் பிசிஆர் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில், 412 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதில் 54 பேருக்கு தொற்று உறுதியானது. இதேவேளை, இன்று மேலும் ஒரு தொகுதியினரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்த முடிவுகளும் வெளியான பின்னரே, யாழ் நகரில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.Read More

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியர் காலமானார்

யாழ் மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தயாரிப்பு, விற்பனையில் கொடிகட்டி பறந்த ஆசிரியர் வே.அன்பழகன் காலமாகியுள்ளார். நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று காலமாகியுள்ளார்.Read More

யாழ்ப்பாண வீடொன்றில் புதையல் தோண்டப்பட்டதா??

யாழ்.நல்லூர் சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றின் சுவாமி அறையில் குழி தோண்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். அந்த வீட்டில் இராணுவத்தினர் எனக் கூறிய சிலர் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதாக நேற்று நண்பகல் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும் அங்கு அகழ்வுப் பணியை முன்னெடுத்தோர் பொலிஸாரின் வருகை அறிந்து தப்பிச் சென்றினர். வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு மாறுபட்ட தகவல்களை வழங்கியுள்ளார். அவர் தானே […]Read More