பெண்ணின் தலைக்கவசம் கழண்டு விழுந்து விபத்து : யாழில் சம்பவம்

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் விபத்துக்குள்ளான போது தலைக்கவசம் கழன்று வீழ்ந்ததால் தலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பிரதீபன் சதீனா (38) என்ற மூன்று பிள்ளைகளின் தாயேஉயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பழை பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் இருந்து தனது வீடு நோக்கி கடந்த 21ம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன் போது […]Read More

கொரோனாவிலிருந்து மட்டும் மீண்டார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். சென்னை, அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள தனது தந்தைக்கு செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேநேரம், எதிர்பார்த்த அளவுக்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்னும் குணமாகவில்லை என எஸ்.பி.சரண் குறிப்பிட்டுள்ளார். மேலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை […]Read More

கண்ணதாசனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றிய கண்ணதாசன் மீதான ஆயுள் தண்டனைத் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு வழக்கை வரும் 28,29 மற்றும் 30ஆம் திகதி தொடர் விளக்கத்துக்காக வவுனியா மேல் நீதிமன்றம் நியமித்தது. அத்துடன், கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பிணை விண்ணப்பத்தை மன்றில் முன்வைத்த போதும் அரச சட்டவாதியின் கடும் ஆட்சேபனையால் கட்டளை வழங்கப்படவில்லை. தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக […]Read More

கிறைன்டருக்குள் கையை விட்ட 3வயது சிறுவன்

கிறைன்டருக்குள் (அரைக்கும் இயந்திரம்) கையை வைத்த 3 வயது சிறுவனின் கை சிதைந்துபோன நிலையில் சுமார் 8 மணித்தியாலங்கள் போராடிய மருத்துவர்கள் கையை உருப்படியாக மாற்றியிருக்கின்றனர். சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம், வீட்டிலிருந்தவர்கள் வடை சுடுவதற்கு ஆயத்தம் செய்துள்ளனர். இதன்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3 வயதான சிறுவன் கிறைன்டருக்குள் கையை வைத்துள்ளான். இதனால் கை சிதைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் […]Read More

சுற்றிவளைப்பின் போது 547 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 547 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் மற்றும் பொது இடங்களில் மதுபானம் அருந்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 6 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியிலே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.Read More

மதில் உடைந்து விழுந்ததில் யுவதி பலி

கடுவல, கொத்தலாவல பகுதியில் உள்ள வீடொன்றின் மதில் ஒன்று கவிழ்ந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த குறித்த யுவதியின் தாயும் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (06) இரவு நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த மதில் உடைந்து விழுந்ததில் வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 29 வயதுடைய சசிகா சியாமலி எனும் யுவதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.Read More

ரஷ்யாவின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது: முதற்கட்ட சோதனை

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் (COVID-19) தடுப்பு மருந்து பாதுகாப்பானது என முதற்கட்டச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டச் சோதனை முடிவுகள் பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் ‘The Lancet’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சோதனையில் 42 நாட்களாகக் கிடைத்த தரவுகளின்படி வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், ‘நோயைக் குணப்படுத்துவதற்கான பிறபொருளெதிரியை 21 நாட்களில் தூண்டுவதாகவும், இந்த மருந்தைச் செலுத்தியதில் எந்த எதிர்மறை விளைவுகளும் ஏற்படவில்லை […]Read More

ஐந்து மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

நாட்டில் சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவிவருவதால் முக்கியமாக ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் தற்போது பெய்துவரும் மழையுடனான காலநிலை சிலநாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில், நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாக திணைக்களம் […]Read More

பெண்ணின் சங்கிலியை அறுத்த கள்வனின் புகைப்படம் சிக்கியது

யாழ்.மீசாலை பகுதியில் 55 வயதான பெண்ணின் சங்கிலியை அறுத்த வழிப்பறி கள்ளனின் புகைப்படம் அப்பகுதியில் இருந்த சீ.சி.ரீ.வி கமராவில் பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மீசாலை வடக்கு இராமாவில் பகுதியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மீசாலை வடக்கு பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஒருவர் சைக்கிளில் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் அவரது […]Read More