இரத்தத்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல்

நாட்டினுள் நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இரத்தத்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்தமாற்ற சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷமன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இன்று (19) முதல் இரத்த தானம் செய்யும் நபர்களுக்காக விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களுக்கு வழங்கப்படும் நேரத்தின் அடிப்படையில் இரத்த தானம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.Read More

வுஹான் நகரிலிருந்து விலகிச் செல்லும் கொரோனா

கடந்த 24 மணித்தியாலங்களில் சீனாவின் வுஹான் நகரில் புதிதாக எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை என சீன சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரிலேயே வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்திருந்தது. கடந்த 24 மணித்தியாலங்களில் பீஜிங் உள்ளிட்ட சீனாவின் ஏனைய பகுதிகளில் 34 பேர் தொற்றுக்குள்ளானதாக பதிவாகியுள்ளது. எனினும் அவர்கள் அனைவரும் வௌிநாடுகளுக்கு சென்று சீனாவுக்கு திரும்பியவர்கள் என அந்நாட்டு சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, மலேசியாவில் கொரோனா வைரஸ், சுனாமி போன்ற அலையை ஏற்படுத்த […]Read More

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. 243 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.Read More

நாளை முதல் அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை

நாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடமுறை தொடர்பில் ஊடகங்கள் ஊடாக தெளிவுபடுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.Read More

கொரோனாவை கட்டுப்படுத்த இந்த மருந்து பெரும்பங்கு வகிக்கிறது! சீனா அறிவிப்பு

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் Favipiravir என்ற மருந்து பெரும்பங்கு வகிப்பதாக சீனா அறிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தினந்தோறும் ஏதேனும் ஒரு நாட்டில் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதுவரை இந்த வைரஸ் காரணமாக 8,961 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் பரவிய நிலையில், அதை அந்நாடு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், போன்ற நாடுகள் தற்போது கொரோனா பிடியில் சிக்கி தவிக்கின்றன. இதனால் இதற்கு தடுப்பு […]Read More