ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மட்டுப்படுத்தவுள்ள ‘ஆல்பபெட்’ நிறுவனம்

கொரோனா வைரஸ் காரணமாக YouTube மற்றும் கூகுள் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக ஆல்பபெட் (Alphabet) நிறுவனமானது எதிர்வரும் நாட்களில் அதன் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மட்டுப்படுத்தவுள்ளது.

இருப்பினும், கடந்தாண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையானது 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், YouTube வருவாய் மார்ச் மாத இறுதியில் 33 சதவீதம் உயர்ந்து 4.04 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

இருப்பினும் YouTube விளம்பரங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்!