பேரன் மருமகனுடன் தீபாவளியை கொண்டாடிய ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்

நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாட்டம் குதூகலமாக அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் தீபாவளிப் பண்டிகையை மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன், பேரன் உள்ளிட்டோருடன் கொண்டாடியுள்ளார்.

பண்டிகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சௌந்தர்யா தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ரஜினிகாந்த் பட்டாசு வெடிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்!