இந்தியா கிரிக்கட் ஜாம்பவான்களுக்கு கொரோனா??

இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் மாதவன், நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-

இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எங்கள் குடும்பத்தில் மற்ற யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

இப்போது மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சுகாதார பணியாளர்களுக்கும், நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ராய்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டியில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்றிருந்தார். கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டதாகவும், இருப்பினும் தனக்கு அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாகவும் சச்சின் கூறியுள்ளார். அவர் விரைவில் நலம்பெற அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சச்சினை தொடர்ந்து அவரது லெஜண்ட் அணியில் விளையாடிய யூசுப் பதானுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்!