சம்பளம் கேட்டது ஒரு குத்தமா? அதுக்கு இப்படியா

ஜார்ஜியாவை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் ஃபிளாட்டன் என்ற நபர் தன்னுடைய பழைய முதலாளியிடம் தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கியை கேட்டதற்கு அவருக்கு கிடைத்துள்ள பரிசு அவரை பெரிய இக்கட்டான சூழலுக்கு தள்ளியிருக்கிறது.

ஃபிளாட்டன் தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியான 915 டாலர்களை விரைவாக வழங்கும்படி தன்னுடைய முதலாளிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவரது முதலாளிக்கு இவர் மீது அப்படி என்ன கோபம் இருந்ததோ தெரியவில்லை. சம்பள பாக்கியை நாணயங்களாக அவருடைய வீட்டின் முன் குவியலாக கொட்டி வைத்துவிட்டு போயிருக்கிறார். அதுவும் கிரீஸ் தடவப்பட்ட 90000 நாணயங்கள். இந்த நாணயக்குவியலுடன் சம்பளத்திற்கான ரசீதும் இணைக்கப்பட்டுள்ளது.

தனது முதலாளியின் இந்த செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஃபிளாட்டன் இந்த நாணயங்களை சுத்தம் செய்தால் தான் இதை பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். சில நாணயங்களை சுத்தம் செய்வதர்கே பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்வதால் மொத்த நாணயங்களையும் சுத்தம் செய்வதற்கு எத்தனை நாட்கள் ஆகுமோ என்று புலம்புகிறார் இந்த மனிதர். தொழிலாளியிடம் திமிராக நடந்து கொள்ளும் இப்படிப்பட்ட முதலாளிகளை பற்றி நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவருடைய காதலி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்!