இணையத்தை கலக்கும் டைரக்டர் அட்லீயின் புதிய ஹேர்ஸ்டைல்

சென்னை : ஆர்யா – நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் டைரக்டர் அட்லீ. தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்ற 3 வெற்றி படங்களை இயக்கினார். தற்போது பாலிவுட்டில் தனது முதல் படத்தை அட்லீ இயக்க உள்ளார். அதுவும் பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதற்கான ப்ரீ புரொடெக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

பாலிவுட்டில் புகழ்பெற்ற ஸ்டைலிஷ்ட்டான ஆலிம் ஹகிம் அமைத்த புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறி உள்ளார் அட்லீ. இந்த மாஸ் ஹேர்ஸ்டைல் ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் பலர் இதை கிண்டல் செய்து கருத்து வெளியிட்டாலும், அட்லீயின் இந்த புதி லுக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்!