யாழ்ப்பாண வீடொன்றில் புதையல் தோண்டப்பட்டதா??

யாழ்.நல்லூர் சங்கிலியன் வீதியில் உள்ள
வீடொன்றின் சுவாமி அறையில் குழி
தோண்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
அந்த வீட்டில் இராணுவத்தினர் எனக் கூறிய சிலர்
அகழ்வுப் பணியை முன்னெடுப்பதாக நேற்று
நண்பகல் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த
தகவலின் அடிப்படையில்
அங்கு சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும்
அங்கு அகழ்வுப் பணியை முன்னெடுத்தோர்
பொலிஸாரின் வருகை அறிந்து தப்பிச் சென்றினர்.
வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு மாறுபட்ட
தகவல்களை வழங்கியுள்ளார். அவர் தானே சுவாமி
அறையின் நிலத்தை கொத்தியதாகவும்
கூறியுள்ளார்.
அதனையடுத்து சந்தேகம் கொண்ட பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

இதையும் படியுங்கள்!