ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வடபகுதி நோக்கி இடம்பெறும் முதலாவது விஜயம் இன்று

வடமாகாணத்திற்கான “கிராமத்துடன் கலந்துரையாடல்” முதலாவது நிகழ்வு வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் இன்று நடைபெறவுள்ளது.

இதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று சனிக்கிழமை (03) வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் ஒன்றான, வெடிவைத்தகல்லு கிராமத்திற்கு வருகை தந்து அப்பகுதி மக்களுடன் உரையாடவுள்ளார்.

இந்நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில், போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின், வடபகுதி நோக்கி இடம்பெறும் முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படியுங்கள்!