கனடாவில் இலங்கைத்தமிழருக்கு அடித்த அதிஷ்டம்

கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பின்மூலம் பெருந்தொகைப்பணம் வீழந்துள்ளது.

ஒன்ராறியோவின் மிசிசிகா நகரில் வசிக்கும் சிவராமன் (65 ) என்பவருக்கே $75,000 பரிசுத்தொகை விழுந்துள்ளது.

எனக்கு இந்த பரிசுத்தொகை விழுந்ததை நம்ப முடியவில்லை. இதன் காரணமாக மேலும் ஐந்து முறை லொட்டரி டிக்கெட்டை ஸ்கான் செய்து பார்த்த பிறகே உறுதி செய்து கொண்டேன்.

பரிசுத்தொகை விழுந்தது தொடர்பாக என் மகளுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து கூறினேன், அவர் மிகவும் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார் என சிவராமன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தந்போதைய கொரோனா தொற்று பிரச்சினைகள் முடிந்த பின்னர் இலங்கை மற்றும் கரீபியனுக்கு செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்!