திருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல முன்னாள் திருமதி உலக அழகி ரோசி சேனாநாயக்க

திருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல என முன்னாள் திருமதி உலக அழகி ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இலங்கையில் நடைபெற்ற திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் வெற்றியீட்டிய புஸ்பிகாவிடமிருந்து கிரீடத்தை பறித்து, இரண்டாம் இடம் வென்றவருக்கு கரோலின் கிரீடம் அணிவித்திருந்தார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் கரோலினது செயற்பாடுகளை முன்னாள் திருமதி உலக அழகி ரோசி சோனாநாயக்க கண்டித்துள்ளார்.

பெண்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், அவ்வாறு முடியாவிட்டால் எங்களது வாய்களை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் பிரச்சினைகள் இருந்திருந்தால் அது மேடைக்கு வெளியே வைத்து தீர்க்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் அனைத்து பெண்களின் சார்பிலும் புஸ்பிகாவிடம் மன்னிப்பு கோருவதாக ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாயைள தினம் புஸ்பிகாவிற்கு அதிகாரபூர்வமாக கிரீடம் வழங்கப்படும் எனவும், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடாத்தப்பட உள்ளதாகவும் போட்டி ஏற்பாட்டுக்குழு பணிப்பாளர் தினேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்!