யாழ்.மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்.மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

யாழ்.மாவட்டத்திலிருந்து சுமார் 1003 பேருடைய PCR மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்திற்கு அனுப்பபட்டிருந்த நிலையில், 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி யாழ். திருநெல்வேலி பாற்பண்ணை பாரதிபுரம் பகுதியில் 88 பேருக்கும், யாழ்.நவீன சந்தையுடன் தொடர்புடைய 20 பேர் அடங்கலாக 26 பேருக்கு யாழ்.மாநகர வைத்திய அதிகாரி பிரிவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சாவகச்சேரியில் 12 பேருக்கும், சங்கானையில் 3 பேருக்குமாக 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்!