அஜித் மான்னப்பெரும நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

கம்பஹா மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.நாடாளுமன்ற உறுப்புாிமையை இழந்த ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட விருப்புவாக்குப் பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்திருந்த அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டார்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, அஜித் மான்னப்பெரும இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதையும் படியுங்கள்!