கொவிஷீல்ட் ஆயுட்காலம் தொடர்பில் சீரம் நிறுவனத்தின் பரிந்துரை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நிராகரிப்பு

கொவிஷீல்ட் தடுப்பூசியின் ஆயுட்காலம் தொடர்பாக இந்தியாவின் சீரம் நிறுவனம் விடுத்த பரிந்துரையை உலக சுகாதார ஸ்தாபனம் நிராகரித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் கொவிஷீல்ட் என்ற பெயரில் தயாரித்து வருகிறது.

இந்த தடுப்பூசியை சேமித்து வைக்கும் கால அளவை 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக நீடிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பரிந்துரை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இதன் மூலம் தடுப்பூசிகள் வீணாகுவதை தடுக்க முடியும் என அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து இந்த ஆயுட்கால நீடிப்புக்கு உலக சுகாதார ஸ்தாபனத்திடம் சீரம் நிறுவனம் விடுத்த பரிந்துரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக விவாதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புடன் கலந்துரையாடல் ஒன்றுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் பயன்பாட்டினால் ஐரோப்பிய நாடுகளில் பக்கவிளைவு குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்!