வாள்வெட்டு சம்பவத்தில் வயதான பெண் ஒருவர் உட்பட 11 பேர் படுகாயம்

கிளிநொச்சி – உருத்திரபுரம் கூழாவடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வயதான பெண் ஒருவர் உட்பட 11 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வீதியால் சென்ற ரக்ரர் மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட முரண்பாடு இவ்வாறு

மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்

சிகிச்சை பெற்றுவருவதுடன் ஏனையோரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை காயம் அடைந்தோரில்

வயது முதிர்ந்த பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்பி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்!