பருத்துறை கடற்பரப்பில் பெருமளவு போதைப் பொருள், படகு, மோட்டார் சைக்கிள் மீட்பு,

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 48 கிலோ கஞ்சா கடற்படை மற்றும் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் முற்றுகை இன்று அதிகாலை ஒரு மணியளவில் பருத்தித்துறை கடற்பரப்பில் இடம்பெற்றது.

கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளும் இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது இந்தியாவிலிருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் கைவிட்டு சென்ற மோட்டார் சைக்கிள் இரண்டும்,

கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட படகும் கைபற்றப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்!