உள்ளூர் முக்கிய செய்திகள்

பேரவல நினைவுத் தூபி மீண்டும் அதே இடத்தில் ! படங்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவல நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் தூபியை மீள அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

சுமந்திரன், சாணக்கியன் உள்பட எம்.பிக்கள் நால்வர் சுயதனிமைப்படுத்தலில்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமாகப் பழகிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தலை கடைப்பிடிக்கின்றனர். இந்த தகவலை நாடாளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்கள் நான்கு பேரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகிய இருவரும் அடங்குகின்றனர். மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலதா அதுகொரல, கஜந்த கருணாதிலக ஆகியோரும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர். அவர்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன். முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அங்கீகரிக்கப்பட்ட தூபியாக அமைக்கத் தயாராக உள்ளேன் – துணைவேந்தர் !

மாணவர்களின் உணர்வுடன் இசைந்தே துணைவேந்தரும் பயணிக்கின்றார். அவ்வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நினைவுத் தூபியாக கட்டியெழுப்பத் தயாராக உள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பது தொடர்பான மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்குவதாக துணைவேந்தர் உறுதியளித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தமை தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் துணைவேந்தர் மேலும் தெரிவித்ததாவது, இணக்கப்பாடு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் உடுப்பிட்டி வயோதிபருக்கு அடித்த யோகம்!

உடுப்பிட்டியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பின் மூலம் 20 லட்சம் ரூபா கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் பல்லாண்டு காலமாக அதிஸ்டலாபச் சீட்டு வாங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றார். அவ்வாறு கடந்த வாரம் வாங்கிய அதிஸ்டலாபச் சீட்டிற்கே 20 இலட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. உடுப்பிட்டியில் சந்தைக்கு அருகாமையில் வசிக்கும் 70 வயதுடைய செல்லத்துரை என்பவருக்கே இந்த அதிஸ்டம் அடித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாடசாலைகள் எப்போது ஆரம்பம்; கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையினை செயற்படுத்துவது தொடர்பில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை குறிபிடத்தக்கது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் மாநகரின் முதல்வராக மணிவண்ணன் தெரிவு!!

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக சட்டத்தரணி விஸ்லிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் விட ஒரு மேலதிக வாக்குகளைப் பெற்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவாகியுள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார். முன்னதாக, இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான யாழ்ப்பாணம் மாநகரசபையின் அமர்வில், முதல்வரைத் தெரிவு செயவதற்கான அறிவிப்பு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நியமன […]

உள்ளூர்

யாழ்.மாநகர சபையின் முதல்வர் பதவிக்குப் மணிவண்ணனும் போட்டி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் போட்டியிடவுள்ளார். “பாதீடு தோற்கடிக்கப்பட்டு பதவியிழந்த முதல்வர் ஆனல்ட்டை மீண்டும் களமிறக்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அவர் மீளவும் முதல்வராகத் தெரிவானால் பாதீடு தோற்கடிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்படும் நிலை ஏற்படும். எனவே தற்போதனைய ஆட்சிக்காலத்தைத் தக்கவைத்து அனைவருடனும் இணைந்து உறுதியான ஆட்சியை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். எனவே கட்சி பேதமின்றி சபையின் அனைத்து உறுப்பினர்களும் உறுதியான ஆட்சிக்கு வாக்களிக்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்.சாவகச்சோி – இல்வாரை நீர் வாய்க்காலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு..!

யாழ்.சாவகச்சோி- கனகம்புளியடி வீதியில் இல்வாரை என்ற இடத்தை பார்வையிடுவதற்கு பெருமளவு மக்கள் கூடிவரும் நிலையில் பொதுமக்கள் அங்கு கூடுவதற்கு சுகாதார பிரிவு தடை விதித்திருப்பதுடன், மீறி கூடினால் பாரபட்சமின்றி அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். என சுகாதார பிரிவினர் தொிவித்திருக்கின்றனர். இது குறித்து மேலும் தொியவருவதாவது, இல்வாரை என்ற பகுதியில் நீர் வாய்க்காலை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் அதிகளவில் கூடிவருகின்றனர். இதனையடுத்து முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரியிருந்தனர். ஆனால் அங்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

குறைந்தளவானவர்களுடன் நத்தாரை கொண்டாடுங்கள்!

இந்தமுறை கிறிஸ்மஸ் ஆராதனைகளை, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி முன்னெடுக்குமாறு அனைத்து கிறிஸ்த்தவ பாதிரியார்களுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இந்தமுறை கொவிட் 19 பரவல் காரணமாக கத்தோலிக்க மக்கள் தத்தமது வீடுகளில் இருந்து மிகவும் அர்த்தபூர்வமாக கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும். வீணாண கொண்டாட்டங்களை தவிர்த்து,ஆன்மீன ரீதியான கொண்டாட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்படாத இடங்களில் 50 […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் பிரபல பாடசாலை மாணவனிற்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளங் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் ஒருவர் 19 வயதுடைய பாடசாலை மாணவனாவார். இணுவில் பகுதியை சேர்ந்த இந்த மாணவன் பாடசாலைகள் இயங்கியது வரையில் தினமும் பாடசாலைக்கு சென்று வந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. யாழ் பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அடையாளங் காணப்பட்டவர்களில் ஒருவர் இணுவிலை சேர்ந்த 19 […]