முக்கிய செய்திகள் விளையாட்டு

லங்கா பிறீமியர் லீக் – வெற்றி பெற்ற ஜப்னா ஸ்டேலியன்ஸ்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி.

லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 ஆண்டுக்கான கிண்ணத்தை வென்று ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டேலியன்ஸ் அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று புதன்கிழமை இரவு நடைபெற்றது. 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த போட்டியில் ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டேலியன்ஸ் அணியும் காலி கிளேடியேட்டர்ஸ் அணியும் மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் மோதிக் கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டேலியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பண்டிகை கால இலகு வட்டி கடன் திட்டங்களை அறிமுகம் செய்துள்ள அரசு!

இலங்கை மக்கள் பண்டிகை காலங்களில் தமது தேவைகளை பூர்த்தி செய்வதாற்கான விசேட கடன் திட்டம் ஒன்றை அரசாங்கம் நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் அறிவித்திருக்கின்றது. பண்டிகை காலத்திற்காக அரச மற்றும் தனியார் பிரிவின் ஊழியர்களுக்கு விசேட கடன் யோசனை முறை, நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த இலகு வட்டிக்கு கடன் வசதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 3 பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் சுகாதார பிரிவினரால் திடீரென காப்புறுதி நிறுவனம் முற்றுகை : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலிருந்த தனியார் காப்புறுதி நிறுவனத்தில் நேற்று காலை 100க்கு மேற்பட்டவர்களுடன் ஒன்று கூடல் கூட்டம் இடம்பெற்ற நிலையில் சுகாதார பொது பரிசோதரின் உத்தரவின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது. நாட்டில் தற்போது கோவிட்-19 தொற்று அதிகரித்து வருகின்ற இந் நிலையில் நாடு முழுவதும் கோவிட் -19 சுகாதார நிபந்தனைகளுடன் கூட்டங்கள் , நிகழ்வுகள் , அலுவலக பணிகள் என்பன இடம்பெற்று வருகின்றமையுடன் வவுனியா மாவட்டத்தில் கடந்த 4 நாட்களிக்குள் மாத்திரம் 8 கோவிட்-19 […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவி இழக்கிறார் – பட்ஜெட் இரண்டாவது தடவை தோற்கடிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் பதவி இழக்கிறார். 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மருதனார்மடம் கொத்தணி்; மேலும் 4 வியாபாரிகளுக்கு தொற்று!

மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரிஆர் முடிவு அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தினால் இன்று (டிசெ. 15) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. உடுவிலைச் சேர்ந்த 2 பேரும் தெல்லிப்பழை, சண்டிலிப்பாயைச் சேர்ந்த தலா ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரும் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகள். இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் […]

தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன…!

செயலிழந்து காணப்பட்ட கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன. இதற்கமைய Gmail, Google search engine, YouTube, Google Maps ஆகிய சேவைகள் தற்காலிகமாக செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சற்று முன்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (15) மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில பகுதிகளிலும் இன்று பி.ப. 2.00 மணியின் பின் மழை அல்லது இடியுடன் கூடடிய மழை பெய்யக்கூடுமெனவும் தொிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

கொரோனாவை ஒழிக்கும் ஒளடதத்தை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்..!

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தக் கூடியது என கூறி உள்ளூர் ஒளடதத்தை பொதுமக்களுக்கு விநியோகிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கேகாலையில் தம்மிக்க பண்டார என்பவரினால் இந்த ஒளடதம் கண்டுபிடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இதனை அவர் நேற்றைய தினம் கேகாலை – உடுமாகம பகுதியில் உள்ள காளி கோயில் வளாகத்தில் வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்தார். அதனை பெற்றுக் கொள்வதற்காக சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கேகாலை பகுதிக்கு சென்றனர். இதன்போது சுகாதார ஒழுங்கு விதிகள் மீறப்பட்டதாக கூறப்படுவது […]

பொழுதுபோக்கு

பாண்டியன் ஸ்டோர் தொடர் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை !

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(28 வயது) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவு மேற்கொண்டுள்ளார். அதிகாலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பிய பின் தூக்கிட்டு தற்கொலை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

காற்றாலை மின்னுற்பத்தி மையம் மன்னாரில் இன்று மக்கள் மயமாகிறது..!

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10.30க்கு இடம்பெறும் இந்த நிகழ்வில், பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கலந்துக் கொள்கிறார். மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் இந்த மின்னுற்பத்தி மையம் அமைந்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வழங்கலில், 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த காற்றாலை மின்னுற்பத்தி மையம் […]