உள்ளூர்

12 கிராமங்களை தனிமைப்படுத்த தீர்மானம்…!

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பொலன்னறுவை-லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவுக்குற்ப்பட்ட 12 கிராமங்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் இந்த 12 கிராமங்களுக்கும் சென்றிருக்ககூடும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து,இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர்

மேலும் ஒருவருக்கு கோரோனா; பாதித்தோர் எண்ணிக்கை 323ஆக உயர்வு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று (ஏப்ரல் 22) புதன்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 323ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. 105 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 211 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்ளூர்

கொழும்பிலிருந்து தப்பிவந்த இரண்டாவது நபர் சங்கானையில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டார்

கொழும்பிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த இரண்டாவது நபரும் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். சங்கானை தேவாலய வீதியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். நாட்டில் கோரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டம் டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர், பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நிலையில் அவரை உடனடியாக தேடிக் கண்டறிந்த வலி.மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தினர். முதலாவது நபர் சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் […]

விளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர் லசித் மலிங்கா!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் விருது லசித் மலிங்காவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த லசித் மலிங்கா ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். தனது அபார பந்துவீச்சால் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை அவர் செய்துள்ளார். மலிங்கா அடுத்தடுத்த நான்கு பந்துவீச்சுகளில் நான்கு விக்கெட்டுகளை சாய்த்தவர், மேலும் அவரது யார்க்கர் வகை பந்து வீச்சுகள் பெரிதும் பேசப்பட்டன. இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் மலிங்காவுக்கு மிகச் சிறந்த […]

பொழுதுபோக்கு

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா 85 வயதில் காலமானார்.

பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா 85 வயதில் காலமானார். கடந்த காலத்தில் நோயால் பெரும் அவதிக்கு உள்ளானார்.மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஸ்டங்களை எதிர் நோக்கினர். நடிகர் விக்ரமின் தூள்,சரத்குமாரின் ஏய், விசாலின் தோரனை,உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தும்,பாடல் பாடியும் உள்ளார்.

தொழில்நுட்பம்

கூகுள் அசிஸ்டன்ட் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்!

மொபைல் சாதனங்கள் உட்பட ஏனைய கணினி சாதனங்களிலும் கூகுள் அசிஸ்டன்ட் அப்பிளிக்கேஷனின் பயன்பாடு அதிக அளவில் காணப்படுகின்றது. அதாவது பயனர்கள் தமது குரல் வழி கட்டளைகள் மூலம் பல விடயங்களை செயற்படுத்தவும், அறிந்துகொள்ளவும் முடியும். இவ்வாறான குறித்த அப்பிளிக்கேஷனானது பல்வேறு மொழிகளில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் சில மொழிகள் உள்ளடக்கப்பட்டு மொத்தமாக 42 மொழிகளில் செயற்படக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த 42 மொழிகளுக்கும் Live Translation வசதியும் தரப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இணையப் பக்கங்களை […]

தொழில்நுட்பம்

கொரோனாவைக் கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக வியாபித்துள்ள நிலையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக என்பதை 5 நிமிடங்களில் கண்டறிய சிறிய அளவிலான போர்ட்டபிள் கருவியை அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ள அப்பொற் லாப்ரட்டரீஸ் (Abbott Laboratories) நிறுவனம், அடுத்த வாரத்தில் இருந்து மருத்துவமனைகளுக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த கருவி மூலக்கூறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும், கொரோனா தொற்று உள்ளதா என்பதை 5 நிமிடங்களில் சொல்லிவிடும் எனவும் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கொரோனா இல்லை என்றால், அது […]

உள்ளூர்

14 நாள்களில் சென்னையிலிருந்து திரும்பிய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குச் செல்ல அறிவுறுத்தல்

கடந்த 14 நாள்களில் இந்தியா சென்று நாடு திரும்பிய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குச் செல்லுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க கேட்டுள்ளார். இந்திய சென்று நாடு திரும்பிய இருவர் இன்று கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதுடன், இந்த வாரத்தில் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் கடந்த 14 நாள்களில் சென்னை சென்று திரும்பிய அனைவரையும் அருகிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர், சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவித்து தனிமைப்படுத்தலுக்குச் செல்லுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் […]