உலகம் உள்ளூர் மருத்துவம் முக்கிய செய்திகள்

அவசரகால பயன்பாட்டுக்கு பைசர் தடுப்பு மருந்துகளை உபயோகிக்க அனுமதியளித்தது WHO

கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா பாதிப்பு பெருந்தொற்று என கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. பல்வேறு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வில் 6 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். இன்றைய தினம் 412 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் உரும்பிராய் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை கிளிநொச்சி – பாரதிபுரத்தை சேர்ந்த இருவருக்கும், முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்குமாக இன்று 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

சஜித்தின் அதிரடி தீர்மானம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள பின்னணியில், 19 பிளஸ் என்ற திருத்தத்தை மேற்கொள்ள பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பத்திரிகை நிறுவனங்களின் பிரதானிகளை எதிர்கட்சி அலுவலகத்தில் நேற்று (08) சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், அதற்கு பதிலாக […]

உலகம் முக்கிய செய்திகள்

தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் ? கொரோனாக்கு தடுப்பூசி கிடைக்குமா ? : முழுவிபரம்

பிரிட்டனின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம். “விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக் குறைவு” ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் மற்றும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வானிலை மையம் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது காணப்படும் வானிலை இன்று மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில்பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

3 வயது சிறுமி உயிரிழப்பு..! தாய் மற்றும் 3 மாத சிசு உட்பட 3 பேர் சிகிச்சையில்

ஓமந்தை – நொச்சிமோட்டை கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், குளவி கொட்டுக்கு இலக்கான 3 வயது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமது விவசாய காணியை துப்புரவு செய்வதற்காக 61 வயதான தாய் மற்றும் 36 வயதான மகள் மற்றும் பேரபிள்ளைகள் இருவமாக 4 பேரும் சென்றிருந்த நிலையில் சுத்தம் செய்வதற்காக வெட்டிய மரத்திலிருந்த குளவி கூட கலைந்து கொட்டிய நிலையில் அயலவர்கள் […]

உள்ளூர்

பெண்ணின் தலைக்கவசம் கழண்டு விழுந்து விபத்து : யாழில் சம்பவம்

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் விபத்துக்குள்ளான போது தலைக்கவசம் கழன்று வீழ்ந்ததால் தலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பிரதீபன் சதீனா (38) என்ற மூன்று பிள்ளைகளின் தாயேஉயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பழை பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் இருந்து தனது வீடு நோக்கி கடந்த 21ம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன் போது […]

இந்திய செய்திகள்

கொரோனாவிலிருந்து மட்டும் மீண்டார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். சென்னை, அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள தனது தந்தைக்கு செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேநேரம், எதிர்பார்த்த அளவுக்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்னும் குணமாகவில்லை என எஸ்.பி.சரண் குறிப்பிட்டுள்ளார். மேலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை […]

உள்ளூர்

கண்ணதாசனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றிய கண்ணதாசன் மீதான ஆயுள் தண்டனைத் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு வழக்கை வரும் 28,29 மற்றும் 30ஆம் திகதி தொடர் விளக்கத்துக்காக வவுனியா மேல் நீதிமன்றம் நியமித்தது. அத்துடன், கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பிணை விண்ணப்பத்தை மன்றில் முன்வைத்த போதும் அரச சட்டவாதியின் கடும் ஆட்சேபனையால் கட்டளை வழங்கப்படவில்லை. தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக […]

உள்ளூர்

கிறைன்டருக்குள் கையை விட்ட 3வயது சிறுவன்

கிறைன்டருக்குள் (அரைக்கும் இயந்திரம்) கையை வைத்த 3 வயது சிறுவனின் கை சிதைந்துபோன நிலையில் சுமார் 8 மணித்தியாலங்கள் போராடிய மருத்துவர்கள் கையை உருப்படியாக மாற்றியிருக்கின்றனர். சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம், வீட்டிலிருந்தவர்கள் வடை சுடுவதற்கு ஆயத்தம் செய்துள்ளனர். இதன்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3 வயதான சிறுவன் கிறைன்டருக்குள் கையை வைத்துள்ளான். இதனால் கை சிதைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் […]