உள்ளூர் முக்கிய செய்திகள்

சிவாஜிக்கு பிணை !!

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவு கூர்ந்தமை உள்ளிட்ட குற்றசாட்டின் கீழ் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை மன்று  எச்சரித்து ஆள் பிணையில் விடுவித்துள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராயில் நினைவேந்தல் நிகழ்வை செய்திருந்தார். அதனை அறிந்த கோப்பாய் பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சிவாஜிலிங்கத்தையும் அவருக்கு வாடகைக்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சிவாஜிலிங்கம் வழக்கு நடந்த விடையங்கள்

“தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி அஞ்சலி செலுத்தியமை, அஞ்சலி நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட பதாகையில் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தியமை மூலம் நாட்டை பிரிக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு பிணை வழங்கக் கூடாது” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர். திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்று, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பு

கடற்படை சமீபத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது முல்லைத்தீவு உதயார்கட்டு பகுதியில் மற்றும் மஹாவலி ஆற்றின் கடுகஸ்தொடை கஹல்ல பகுதியில் மணல் அகழ்வாராய்ச்சி இடத்தில் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் கிளிநொச்சி சிறப்பு பணிக்குழு இணைந்து முல்லைதீவு உதயார்கட்டு பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 60 மிமீ மற்றும் 81 மிமீ கொண்ட 2 மோட்டார் குண்டுகள், 120 மிமீ கொண்ட 02 மோட்டார் குண்டுகள், 60 மிமீ […]

இந்திய செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள்

சுஷாந்தின் காதலி சிறையில்?

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ரியா சக்ரபோர்த்திக்கு 14 நாடகள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து இந்திய சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் உட்பட இரண்டு பேரை கைது செய்திருந்தது. ரியா சக்ரபோர்த்தியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து விசாரணை நடத்தி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் விசேட சுற்றிவளைப்பு 62 பேர் கைது

யாழ்ப்பான பிராந்திய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளபட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலில் 62 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 39 பேருக்கு தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பான பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில் சுற்றிவளைப்பு நேற்று நடைபெற்றது.இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை யாழ்ப்பான பிராந்திய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றன. இந்த சுற்றிவளைப்பு தேடுதலின் போது குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 9 பேரும் சந்தேகத்தின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் உயிரிழப்பு : காரணம் என்ன ?

நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த வாரம் டுபாய் நாட்டில் இவர் இலங்கையை வந்திருந்தார். வெளிநாட்டில் இருந்து வருகை தந்ததன் காரணமாக நுவரெலியாவில் அமைந்துள்ள விருந்தகமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். உயிரிழந்தவர் டுபாய் நாட்டில் இருந்தபொழுது அவருக்கு ஒருவகை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததுடன், நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அண்மையில் அவருக்கு ஏற்பட்ட […]

உள்ளூர்

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்கு நிலையம்

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1982 ஆண்டு இலக்கம் 10 யின் கீழான பயங்கரவாதததை தடுக்கும் (தற்காலிக விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்துடன் வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆண்டு இலக்கம் 48 யின் கீழ் பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக) ஒழுங்கு விதிகள் சட்டததின் 15 ஆவது சரத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அந்த சரத்தில் கூறப்பட்டுள்ள பணிகளுக்காக – தங்காலை பழைய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சில மாவட்டங்களில் பி.ப. 2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

நாட்டின் தென்மேற்கு வடமேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நாளையும் (05) நாளை மறுதினமும் (06) சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் […]

பொழுதுபோக்கு முக்கிய செய்திகள்

பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் விபரம் வௌியானது

தமிழ் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் பல லட்சம் பேர் எப்போது ஒளிபரப்பாகும் என காத்துகொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4. உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் சமீபத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4ன் புரமோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் சீசன் […]

உள்ளூர்

யாழில் சுற்றிவளைப்பு : பலர் கைது

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியிலேயே இன்று (01) காலை முதல் இவ்வாறு பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கஞ்சா, ஹெரோயின் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதுடன், கஞ்சா மற்றும் ஹெரோயின்களும் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். […]