முக்கிய செய்திகள் விளையாட்டு

லங்கா பிறீமியர் லீக் – வெற்றி பெற்ற ஜப்னா ஸ்டேலியன்ஸ்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி.

லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 ஆண்டுக்கான கிண்ணத்தை வென்று ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டேலியன்ஸ் அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று புதன்கிழமை இரவு நடைபெற்றது. 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த போட்டியில் ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டேலியன்ஸ் அணியும் காலி கிளேடியேட்டர்ஸ் அணியும் மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் மோதிக் கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா (யாழ்ப்பாணம்) ஸ்டேலியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 […]

விளையாட்டு

இங்கிலாந்து vs பாகிஸ்தான் மூன்றாவது T20 : பாகிஸ்தான் வெற்றி

இங்கிலாந்து அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடர், 1 க்கு 1 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. மென்சஸ்டரில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி, 5 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து, 190 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து, 191 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 […]

விளையாட்டு

ரெய்னா விவகாரம் என்னதான் நடக்கின்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்

கொரோனா காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்த முடியாத சூழலில் அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு ஐபிஎல் அணி வீரர்கள் அமீரகம் சென்றுள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரரான சுரேஷ் ரெய்னா திடீரென போட்டிகளில் இருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் துபாய் செல்வதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் ஒரு வாரம் தங்கி பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சி தேவை இல்லாத ஒன்று […]

விளையாட்டு

ரெய்னாவின் மாமா கொள்ளைக்காரர்கள் தாக்கியதில் உயிரிழப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டார். எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சக வீரர்களுடன் புறப்பட்டுச் சென்றார். கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக அணி வீரர்கள், ஐ.பி.எல். ஊழியர்கள், பி.சி.சி.ஐ. ஊழியர்கள் மற்றும் துணை பணியாளர்கள் என மொத்தம் 1,988 பேருக்கு ஆகஸ்ட் […]

முக்கிய செய்திகள் விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 13 பேருக்கு கொரோனா

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21 ஆம் திகதி துபாய் சென்றது. அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தனித்தனியாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த ஆறு நாட்களில் முதல் நாள், 3-வது நாள் மற்றும் 6-வது நாள் […]

விளையாட்டு

முதற்தர போட்டிகளில் மட்டும் சாதனை படைக்கும் சந்திமால்

முதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை தினேஸ் சந்திமால் பெற்றுள்ளார். 391 பந்துகளில் 33 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 354 ஓட்டங்களை பெற்று இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.

விளையாட்டு

உசைன் போல்டுக்கு கொரோனா!

உலகின் மின்னல் வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கப் பதக்கமும் அறுவடை செய்த மகத்தான சாதனையாளர் ஆவார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக ஓடிய உலக சாதனையும் இவரது வசமே உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. […]

உள்ளூர் முக்கிய செய்திகள் விளையாட்டு

விளையாட்டுகள் தொடர்பாக புதிய சட்டம்: அமைச்சர் நாமல்

விளையாட்டுகளில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் விதமாக நவீன முறையிலான புதிய சட்டம் காணப்பட வேண்டுமென விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஊழல் எதிர்ப்பு மற்றும் இலஞ்சம் தொடர்பான ஏற்பாடுகள் புதிய விளையாட்டுச் சட்டத்தில் பெரிதும் இடம்பெறும். மேலும், இந்தச் சட்டத்தை வகுப்பது குறித்து ஆராய ஒரு குழுவை, தேசிய விளையாட்டு சபை நியமிக்கும். இந்த குழு, விளையாட்டு சபையினால் நியமிக்கப்படும். நாங்கள் அதை […]

உள்ளூர் முக்கிய செய்திகள் விளையாட்டு

சங்கா, மஹேலவிற்கு அழைப்பு விடுத்த நாமல்

இலங்கையின் கிரிக்கெட் லெஜண்ட்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தனவை தேசிய விளையாட்டு சபையில் அங்கம் வகிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். விளையாட்டுத்துறை தொடர்பான கொள்கை வகுப்பதில் இந்த குழு, அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும். தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினர்கள் இன்று பிற்பகுதியில் பெயரிடப்படவுள்ளனர். 1973 ஆம் ஆண்டின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் (பிரிவு 25 பிரிவு 4) இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய விளையாட்டு சபை நியமிக்கப்படவுள்ளது. சங்கக்கார மற்றும் மஹேல தவிர, […]

முக்கிய செய்திகள் விளையாட்டு

ஒரு தலைவனின் சகாப்தம் முடிந்தது

இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர், சர்வதேச கிரிக்கெட் கவுன் சிலின் 3 விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், பதற்றமடையாத அணித் தலைவர், அதிரடி ஆட்டக்காரர் என பல பெருமைகளுக்கு உரியவர் மகேந்திரசிங் தோனி. இந்திய கிரிக்கெட்டுக்காக 16 ஆண்டுகள் விளையாடிய தோனி இந்தியக் கிரிக்கெட் உலகில் அதிக ஆண்டுகள் வெற்றிகரமாக கோலோச்சிய கேப்டன்களில் ஒருவர். தலைசிறந்த தலைமைப் பண்பால் அணியில் அனைவரையும் அரவணை த்துச் சென்றார். இந்திய கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு அளப்பரியது.  2011 […]