தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன…!

செயலிழந்து காணப்பட்ட கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன. இதற்கமைய Gmail, Google search engine, YouTube, Google Maps ஆகிய சேவைகள் தற்காலிகமாக செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சற்று முன்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் முக்கிய செய்திகள்

66 புதிய எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு

தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் (நாசா) டிரான்சிடிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (டெஸ்) இரண்டு ஆண்டு கணக்கெடுப்பின் போது  சூரிய மண்டலத்திற்கு அப்பால் 66 புதிய எக்ஸோப்ளானெட்டுகளைக் கண்டறிந்தது,

தொழில்நுட்பம்

யூடியூப் பயன்படுத்துபவரா நீங்கள்? இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

தற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி தகவல்கள் சமூகவலைத்தளங்களின் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றது. அதேபோன்று யூடியூப்பிலும் தவறான தகவல்கள் கொண்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.இவை மக்களை அச்சம்கொள்ளச் செய்யக்கூடியதாக இருக்கின்றது. இவை மக்களை அச்சம்கொள்ளச் செய்யக்கூடியதாக இருக்கின்றது.இதனால் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உட்பட மேலும் பல தளங்கள் பொய்யான தகவல்களை நீக்குவதில் முனைப்புக்காட்டி வருகின்றன. இப்படியான நிலையில் யூடியூப்பில் Fact Checking எனும் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படுகின்றது. வீடியோக்களின் உண்மைத் தன்மையை அறியும்பொருட்டு […]

தொழில்நுட்பம்

ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மட்டுப்படுத்தவுள்ள ‘ஆல்பபெட்’ நிறுவனம்

கொரோனா வைரஸ் காரணமாக YouTube மற்றும் கூகுள் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக ஆல்பபெட் (Alphabet) நிறுவனமானது எதிர்வரும் நாட்களில் அதன் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மட்டுப்படுத்தவுள்ளது. இருப்பினும், கடந்தாண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையானது 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், YouTube வருவாய் மார்ச் மாத இறுதியில் 33 சதவீதம் உயர்ந்து 4.04 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இருப்பினும் YouTube விளம்பரங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்பம்

பூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு!

நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் மற்றுமொரு கோளினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கார் அளவே கொண்ட குறித்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் காடலினா ஸ்கை சர்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘2020 சிடி3’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த குறுங்கோள், 3 ஆண்டுகளுக்கு முன்னர் புவி வட்டப் பாதையை அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த குறுங்கோள் பூமியை தற்காலிமாகவே சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, ‘2006 ஆர்ஹெச்120’ என்ற குறுங்கோள் பூமியைச் […]

தொழில்நுட்பம்

கூகுள் அசிஸ்டன்ட் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்!

மொபைல் சாதனங்கள் உட்பட ஏனைய கணினி சாதனங்களிலும் கூகுள் அசிஸ்டன்ட் அப்பிளிக்கேஷனின் பயன்பாடு அதிக அளவில் காணப்படுகின்றது. அதாவது பயனர்கள் தமது குரல் வழி கட்டளைகள் மூலம் பல விடயங்களை செயற்படுத்தவும், அறிந்துகொள்ளவும் முடியும். இவ்வாறான குறித்த அப்பிளிக்கேஷனானது பல்வேறு மொழிகளில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் சில மொழிகள் உள்ளடக்கப்பட்டு மொத்தமாக 42 மொழிகளில் செயற்படக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த 42 மொழிகளுக்கும் Live Translation வசதியும் தரப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இணையப் பக்கங்களை […]

தொழில்நுட்பம்

கொரோனாவைக் கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக வியாபித்துள்ள நிலையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக என்பதை 5 நிமிடங்களில் கண்டறிய சிறிய அளவிலான போர்ட்டபிள் கருவியை அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ள அப்பொற் லாப்ரட்டரீஸ் (Abbott Laboratories) நிறுவனம், அடுத்த வாரத்தில் இருந்து மருத்துவமனைகளுக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த கருவி மூலக்கூறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும், கொரோனா தொற்று உள்ளதா என்பதை 5 நிமிடங்களில் சொல்லிவிடும் எனவும் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கொரோனா இல்லை என்றால், அது […]