உலகம் உள்ளூர் மருத்துவம் முக்கிய செய்திகள்

அவசரகால பயன்பாட்டுக்கு பைசர் தடுப்பு மருந்துகளை உபயோகிக்க அனுமதியளித்தது WHO

கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா பாதிப்பு பெருந்தொற்று என கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. பல்வேறு […]

உலகம் முக்கிய செய்திகள்

வடக்கில் இன்றும் 100 மி.மீ. மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய […]

உலகம்

சீனாவின் விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது!

நிலவின் தொலைதூரப் பகுதியில் தமது ரோபோ விண்கலம் ஒன்றைத் தரையிறக்கியதாக சீனா கூறியுள்ளது. இது போன்ற ரோபோ விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்குவது இதுவே முதல் முறை. சாங்’இ-4 என்ற அந்த விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள ஐட்கென் படுகையில் பெய்ஜிங் நேரப்படி காலை 10.26 மணிக்கு (2.26 கிரீன்விச் நேரம்) தரையிறங்கியதாக சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா சந்திரனுக்கு அனுப்பிய சாங் இ 5 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியுள்ளது என்று […]

உலகம்

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசி 90 சதவீதம் வினைத்திறனானது என அறிவிப்பு!

பிரிட்டனின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொவிட் 19 தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனையில் 90சதவீதம் வினைத்திறனாவுள்ளமை தெரியவந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனத்துடன்  இணைந்து கொரோனா எனும் கொவிட்19 நோய்கான்கான தடுப்பு மருந்தை தயாரித்து பரிசோதித்தது வருகிறது. இத்தடுப்பு மருந்துக்கு கோவிஷீல்ட் ((Covishield) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இடைக்கால தரவுகளின்படி, இத்தடுப்பூசியானது 70 சதவீதம் பாதுகாப்பளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இருதடவைகள் செலுத்தப்பட்ட பின் இது  90 சதவீதம் வரை இது வினைத்திறனாக உள்ளது என  ஒக்ஸ்போர்ட் […]

உலகம் முக்கிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி தயார்… அமெரிக்க நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க 94.5 சதவிகிதம் செயற்திறனுடன் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 3ஆம் கட்டமாக நடந்த கடைசி சோதனை முயற்சியின் இடைக்கால முடிவுகளின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 30,000 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 94.5% செயற்திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்வரும் வாரங்களில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பரிசோதனையின் போது, அமெரிக்கர்கள், ஆபிரிக்கர்கள், […]

உலகம் முக்கிய செய்திகள்

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரிப்பு!

கொவிட் 19 தொற்றால் நாட்டில் 42 ஆவது மரணம் இன்று பதிவாகியுள்ளது. பாணந்துறை பகுதியை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவரே கொவிட் 19 தொற்றால் மரணமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மரடைப்பால் அவர் உயிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

உலகம் முக்கிய செய்திகள்

அரச ஊழியர்களின் ஆடையில் அடுத்த வருடம் முதல் மாற்றம்

அடுத்த வருடம் தொடக்கம், அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நேற்று (10) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்குரிய வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கையின் புடவை உற்பத்திக் கைத்தொழிலில் நிலவும் பிரச்சனைகளக்குத் தீர்வு கண்டு, நாடெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்புக் கலைஞர்களின் […]

உலகம் முக்கிய செய்திகள்

நண்பியின் வீட்டில் பதுங்கியிருந்த கொரோனா நோயாளியான கொழும்பு இளைஞன் கண்டுபிடிப்பு!

கொழும்பு துறைமுகத்தில் பணிபுரிந்த 22 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக புத்தளம் ஆனமடுவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.. தொற்றுக்குள்ளான இளைஞன் ஆனமடுவவின் மருங்கோடாவில் வசிக்கிறார் கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார், மூன்று நாட்களுக்கு முன்பு கொழும்பில் தனது பரிசோதனை மாதிரிகளைப் பெற்றுக்கொண்டிருந்தார். தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிந்தும் அவர் தனது பெண் நண்பியின் வீட்டில் பதுங்கி இருந்துள்ளார் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இளைஞர் […]

உலகம் முக்கிய செய்திகள்

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு! கொழும்பை சேர்ந்த மேலும் இருவர் பலி!

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் இரண்டு மரணங்கள் இன்று பதிவாகியுள்ளதாக கொழும்பு வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கொழும்பு மாளிகாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும், கொழும்பு புறக்கோட்டையை சேர்ந்த 42 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் கொழும்பு மாவட்டத்சை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா மரணங்கள் இவ்விரு மரணங்களுடன் சேர்த்து 32ஆக அதிகரித்துள்ளமை இதேவேளை இந்த தொடர்பில் அரசாங்க தகவல் திணைகளம் அறிக்கை […]

உலகம் முக்கிய செய்திகள்

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நடத்தப்படும் கூட்டம்! சமூக ஊடகங்களில் விமர்சனங்கள்

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது. தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்துக்கு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கி 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. 1. சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு, 2. வாழ்வாதார மேம்பாட்டு குழு, 3. உள்நாட்டு […]